Small Boxes செய்திகள்

இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் கலந்துரையாடவுள்ளனர்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, இழுவைப் படகுகள் மூலம், மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக, இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், வரும் புதன்கிழமை இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக் குழுவுக்கு வட பிராந்திய கடற்படைத் தளபதி கொமாண்டர் பிரியந்த பெரேராவும், இந்திய கடற்படைக் குழுவுக்கு, சென்னை கடற்படைத் தளபதியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு சர்வதேச கடல் எல்லையில் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இந்திய, இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதை உறுதி செய்துள்ள சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா, இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என குறிப்பிட்டுள்ள போதும்,  மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *