பல்சுவை

தனியார் நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட நபர் UPSC தேர்வில் சாதனை !

காது கேளாதவர் என்ற குறைபாட்டை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் வேலை கொடுக்காமல் நிராகரித்த நிலையில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் முயற்சித்ததால் தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாக கோவையை சேர்ந்த மாற்றுதிறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் 750 வது இடத்தை பெற்றுள்ள ரஞ்சித் குறித்து பார்க்கலாம்.கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் –  அமிர்தவள்ளி தம்பதியின் இரண்டாவது மகன் ரஞ்சித். பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உடைய இவர் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து 12 ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டிய நிலையில் , பின்னர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தார்.  இதனை தொடர்ந்து UPSC தேர்வு எழுதிய நிலையில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.மாற்று திறனாளியான ரஞ்சித் UPSC தேர்வில் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *